Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 20 செப்டம்பர் (ஹி.ச.)
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சாதி ரீதியிலான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, பள்ளி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் இருதரப்பாக மோதிக்கொண்டனர்.
இதில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில்,
இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் 16 மற்றும் 17 வயதுடைய 7 மாணவர்கள் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர் அவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற மாணவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். பேருந்து நிலையம் அருகே மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam