Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை - செங்கோட்டை இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வரும் தென் மாவட்ட மக்களின் விருப்பமான ரயில்களில் ஒன்றான பொதிகை அதிவிரைவு ரயிலானது தனது சேவையை தொடங்கி 22 ஆண்டுகள் நிறைவு பெற்று 23-வது ஆண்டில் இன்றைய தினம் அடியெடுத்து வைக்கிறது.
குறிப்பாக, 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி இந்த ரயில் சேவையானது முதலில் தென்காசி - சென்னை இடையே தனது சேவையை தொடங்கிய நிலையில், தொடர்ந்து சில வருடங்களுக்கு பிறகு செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்வதற்கும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படுவதற்கும் சரியான நேரத்தில் இயக்கப்பட்டு வரும் இந்த பொதிகை அதிவிரைவு ரயிலுக்கு எப்பொழுதுமே ஒரு தனி மவுசு உண்டு.
உதாரணமாக, இந்த ரயிலில் டிக்கெட் கிடைப்பது அரிது என கூறப்படும் நிலையில், இந்த ரயில் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் பயணம் செய்து வரும் நிலையில், சிறப்பாக தனது சேவையை ஆற்றி வரும் இந்த பொதிகை அதிவிரைவு ரயில் சேவையானது வெற்றிகரமாக 22 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 23-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிலையில், பொதிகை அதிவிரைவு ரயிலானது தனது சேவையை தொடர்ந்து சிறப்பாக செய்ய வேண்டுமென தென் மாவட்ட ரயில் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN