வார விடுமுறையையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்
ராமநாதபுரம், 20 செப்டம்பர் (ஹி.ச.) ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 20 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை வார விடும
Rameshwaram Temple


ராமநாதபுரம், 20 செப்டம்பர் (ஹி.ச.)

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 20 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்தது.

அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு வந்த பக்தர்கள் புனித நீராடி, மறைந்த தங்களது முன்னோர்களுக்கு எள்ளுப் பிண்டம் வைத்து திதி உள்ளிட்ட சடங்குகளை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

வார விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், கோயில் மற்றும் நான்கு ரத வீதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

எந்தவித குற்றச் சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN