Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 20 செப்டம்பர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பிரம்மகுண்டம் பேருந்து நிலையத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் புல் கோட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது பட்டியலினத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் இருவர்கள் அவ்வழியாக சென்றபோது கோட்டி புல் அவர்கள் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி அன்று அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மோதலின் காரணமாக மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் எட்டு பேர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சந்திப் என்ற மாணவனை பள்ளி வளாகத்திலேயே துரத்தி சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த சந்திப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி நுழைவாயில் முன் முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட மாணவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வடபொன்பரப்பி காவல் நிலைய போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது உடனடியாக கைது செய்ய வேண்டுமென கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரை பள்ளி வளாகம் முழுவதும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை ஈடுபட்டு உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வோம் என வாக்குறுதி அளித்த பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து எட்டு பள்ளி மாணவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து எஸ்பி தலைமையில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சரக டி.ஐ.ஜி அருளரசு நேரில் எஸ்.பி.இடம் விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 8 பள்ளி மாணவர்களின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / ANANDHAN