கோவையில் தனிஷ்க் சார்பில் பிரத்யேக காதணிகள் நகைத் தொகுப்பு கண்காட்சி
கோவை, 20 செப்டம்பர் (ஹி.ச.) கோவை மேட்டுப்பாளையம் சாலை, ஒப்பணக்கார வீதி, ஆர்.எஸ்.புரம், கிராஸ்கட் சாலை, பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள தனிஷ்க் நகைக் கடைகளில் இந்த பிரத்யேக காதணிகள் கண்காட்சி மற்றும் தங்க நகை பரிமாற்ற மேளா நடைபெற்று வ
நகை கண்காட்சி


கோவை, 20 செப்டம்பர் (ஹி.ச.)

கோவை மேட்டுப்பாளையம் சாலை, ஒப்பணக்கார வீதி, ஆர்.எஸ்.புரம், கிராஸ்கட் சாலை, பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள தனிஷ்க் நகைக் கடைகளில் இந்த பிரத்யேக காதணிகள் கண்காட்சி மற்றும் தங்க நகை பரிமாற்ற மேளா நடைபெற்று வருகிறது.

தனிஷ்க் நிறுவனத்தின் தமிழ்நாடு வணிகப் பிரிவின் கிளஸ்டர் தலைவரான சந்தோஷ், கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

செப்டம்பர் 18-ம் தேதி தொடங்கியுள்ள இந்தக் கண்காட்சி அக்டோபர் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை வாடிக்கையாளர்கள் கண்காட்சியைப் பார்வையிடலாம்.

சிறந்த கைவினைத்திறனுடன் உருவாக்கப்பட்ட பல்வேறு பிரத்யேக வடிவமைப்புகளிலான காதணிகளை ஒரே இடத்தில் பார்வையிடும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கண்காட்சி வழங்குகிறது.

மேலும், கண்காட்சியில் இடம்பெறும் நகைகளுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தங்க நகை பரிமாற்றத் திட்டத்தின் கீழ் 18 காரட் வரையிலான தங்க நகைகளுக்கு கழிவு கட்டணம் இன்றி பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நகைகளை முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P