Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 20 செப்டம்பர் (ஹி.ச.)
ஐதராபாத்தில் புகழ்பெற்ற கெய்ரதாபாத் மகாகணபதி சிலை வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஹுசைன் சாகரில் கரைக்கப்பட உள்ளது.
இதற்கான தேதியை விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கெய்ரதாபாத்தில் இந்த ஆண்டு ‘ஸ்ரீ பஞ்சமுக சங்கடஹர மகாகணபதி’ என்ற பெயரில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வழக்கமாக 11 நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா, இந்த ஆண்டு ஒரு நாள் கூடுதலாக 12 நாட்கள் நடைபெறுகிறது.
இதனால் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், வருகிற 25-ந் தேதி அனந்த சதுர்த்தசி பண்டிகை வருவதால், அன்றைய தினமே மகாகணபதி சிலையை ஹுசைன் சாகரில் கரைக்க விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இதையொட்டி சிலை கரைப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மகாகணபதி சிலை கரைப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி கூட்டத்தை கட்டுப்படுத்துதல், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சிலை கரைப்பு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஐதராபாத் நகரில் விநாயகர் பக்தர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA