திருப்பதி பிரம்மோற்சவம் - 6-ம் நாள் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா
திருப்பதி, 20 செப்டம்பர் (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள் விழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 6-ம் நாள் மாலை 4
பெருமாள்


திருப்பதி, 20 செப்டம்பர் (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள் விழா விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி, மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

6-ம் நாள் மாலை 4 மணிக்கு தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து, கோயிலின் நான்கு மாட வீதிகளில் தங்க ரத வீதி உலா நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் சுவாமி எழுந்தருளியதை, மாட வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

வீதி உலாவையொட்டி மாட வீதிகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு சுவாமியை வழிபட்டனர். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தங்க ரத வீதி உலா பக்தர்களிடையே சிறப்பு வரவேற்பை பெற்றது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P