விழுப்புரத்தில் பேனர் அவிழ்க்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்
விழுப்புரம், 20 செப்டம்பர் (ஹி.ச) விழுப்புரம் மாவட்டம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் மதன்குமார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக கே.கே. சாலையில் உள்ள மின்கம்பம் ஒன்றில் பேனர் கட்டியிருந்ததாக கூறப்படுகிறது.
Youth dies of electrocution while removing a banner


விழுப்புரம், 20 செப்டம்பர் (ஹி.ச)

விழுப்புரம் மாவட்டம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் மதன்குமார்.

இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக கே.கே. சாலையில் உள்ள மின்கம்பம் ஒன்றில் பேனர் கட்டியிருந்ததாக கூறப்படுகிறது.

விழா முடிந்த நிலையில், விழா குழுவினர் அந்த பேனரை அவிழ்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பேனர் மின்கம்பத்தில் இருந்த மின் கம்பியின் மீது பட்டதில், அதில் இருந்து மின்சாரம் பாய்ந்து விபரீதம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் மதன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த மூன்று பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த மதன்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மின்கம்பங்களில் பேனர் கட்டுவதால் ஏற்படும் ஆபத்து குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b