Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை அருகே ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது கரீம், வயது 55. இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சொந்த வேலை காரணமாக தனது மனைவியுடன் ஆம்பூருக்கு சென்றிருந்தார்.
வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வெளியூர் சென்றிருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
வீட்டின் படுக்கையறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 25 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.50,000 ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ஆம்பூரிலிருந்து திரும்பி வந்த முகமது கரீம், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக ஐயப்பன்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தடயவியல் நிபுணர்களுடன் விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b