Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 58-வது கூட்டம் வரும் செப்டம்பர் 24-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற உள்ளது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி படுகையில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் குறுவை மற்றும் சம்பா சாகுபடியைக் காக்க கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ள சூழலில் இந்தக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், அணைகளின் தற்போதைய நீர் இருப்பு, நீர்வரத்து நிலவரம், மாநிலங்களின் தேவை மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடப்பு மாதத்திற்கான நீர் பகிர்வு குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் கோரிக்கைக்கு கர்நாடகா தரப்பில் என்ன பதில் அளிக்கப்படும் என்பதைப் பொறுத்தே கூட்டத்தின் முடிவு அமையும்.
Hindusthan Samachar / vidya.b