திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதிஉலா
திருமலை, 21 செப்டம்பர் (ஹி.ச.) ஏழு குதிரையின் மீது சூரியனுக்கு ரத சாரதியாக சிவப்பு மாலை அணிந்து ஊர்வலம் வருவது மூலம் சூரிய பகவனின் பிரத்தி ரூபம் தானே என்னும் விதமாக பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளான இன்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவா
A


திருமலை, 21 செப்டம்பர் (ஹி.ச.)

ஏழு குதிரையின் மீது சூரியனுக்கு ரத சாரதியாக சிவப்பு மாலை அணிந்து ஊர்வலம் வருவது மூலம் சூரிய பகவனின் பிரத்தி ரூபம் தானே என்னும் விதமாக பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளான இன்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் உலா பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வீதிஉலாவில் தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடாக, கேரள, மஹாராஷ்டிர மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலட்டம், தப்பட்டம், பஜனைகள் செய்தபடியும் சுவாமியின் பல்வேறு வேடம் அணிந்து ஊர்வலமாக அணிவகுத்து வந்தனர்.

இன்று இரவு வெள்ளை நிற ஆடை, மாலை அணிந்து சந்திரபிரபை வாகனத்தின் மீது மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். சூரியன் அக்னி வடிவம், சந்திரன் சாந்த வடிவம் என்பதால் இரண்டும் தனது அம்சமே என்னும் விதமாக சூரியன் மற்றும் சந்திர வாகனத்தில் சுவாமி வீதிஉலா வருகின்றார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA