ஆசிரியர்கள் மீது தாக்குதல் முயற்சி -வை.சி.பி. தலைவர்களுக்கு அமைச்சர் ராம்பிரசாத் ரெட்டி கண்டனம்
விஜயவாடா , 21 செப்டம்பர் (ஹி.ச.) விஜயவாடாவில் உள்ள ‘ஷாப்’ அலுவலகம் அருகே ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என்று ஆந்திர மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ராம்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜயவ
A


விஜயவாடா , 21 செப்டம்பர் (ஹி.ச.)

விஜயவாடாவில் உள்ள ‘ஷாப்’ அலுவலகம் அருகே ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என்று ஆந்திர மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ராம்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

வை.சி.பி. தலைவர்கள் ஜோகி ரமேஷ், தேவினேனி அவினாஷ் உள்ளிட்டோர் கும்பலாக வந்து ‘ஷாப்’ அலுவலகத்தை முற்றுகையிட்டு, கற்கள் மற்றும் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்த முயன்றதாக குற்றம்சாட்டினார்.

டி.எஸ்.சி. விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் ஆசிரியர் பணியை பெற்றவர்களை தாக்க முயன்றது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், கடினமாக உழைத்து அரசு வேலை பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆசிரியர்களை அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.

பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது முறையல்ல என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற செயல்களை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றவர்கள் மற்றும் அரசு அலுவலகத்தில் வன்முறையை ஏற்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராம்பிரசாத் ரெட்டி எச்சரித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ‘ஷாப்’ அலுவலகம் அருகே மெகா டி.எஸ்.சி. விளையாட்டு ஒதுக்கீட்டில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் வை.சி.பி. தலைவர்கள் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் கோஷங்கள் எழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA