Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 21 செப்டம்பர் (ஹி.ச.)
பாஜக மூத்த தலைவரும் மேற்கு வங்க அமைச்சருமான திலீப் கோஷ் இன்று சிலிகுரி பகஜதின் பூங்காவில் நடைபெற்ற ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) சாகாவில் பங்கேற்றார்.
அங்கு ஸ்வயம் சேவகர்களுடன் கலந்துரையாடிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியார்களிடம் அவர் கூறியதாவது,
பிரதமர் மோடியின் தலைமை குறித்து எந்த கேள்வியும் இல்லை. நாடு அவரது தலைமையின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைத்துள்ளது. இன்று உலகின் பெரிய நாடுகள் அவரை அழைத்து மரியாதை செலுத்துகின்றன.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் பெருமளவில் ஏற்ற இறக்கத்தை சந்தித்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லறை விலைகள் நிலையாக உள்ளன.
ராகுல் காந்தி ஒருபோதும் தீவிரமாக இருந்ததில்லை, அதனால்தான் பொதுமக்களும் அவரை ஒருபோதும் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. அவர் தனது வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் இருப்பார். அவர் எந்த இலக்கையும் அடைய முயற்சிக்கவில்லை, வெறும் நாடகமாடுகிறார், மக்கள் அவரை கேலி செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
செப்டம்பர் 19 அன்று இந்தூரில் நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்ற போது, பிரதமர் மோடியையும் அவரது மறைந்த தாயாரையும் கேலி செய்யும் வகையில் பேசியதாகவும், நடித்துக் காட்டியதாகவும் பாஜக தலைவர்கள் விமர்சித்ததை அடுத்து அமைச்சர் திலீப் கோஷின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b