குற்றால அருவிகளில் குளிக்க தடை நீக்கம் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தென்காசி, 21 செப்டம்பர் (ஹி.ச.) தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அபாய அளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவ
Ban on bathing in Courtallam waterfalls lifted


தென்காசி, 21 செப்டம்பர் (ஹி.ச.)

தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அபாய அளவை எட்டியது.

இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தடை விதித்திருந்தனர்.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்ததை அடுத்து, குற்றால அருவிகளுக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக சீரானது. நீர்வரத்து குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை வனத்துறையினர் நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.

தற்போது குற்றாலத்தின் பிரதான அருவிகளான மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தடை நீக்கப்பட்டதை அறிந்ததும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் அருவிகளில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

அருவிப் பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க காவல்துறையினரும் வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து மீண்டும் அதிகரித்தால் பாதுகாப்பு கருதி தற்காலிக முடிவுகள் எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b