உழைப்பது நாமாக இருப்போம், உதிப்பது உதயசூரியனாக இருக்கட்டும் - மேயர் பிரியா
சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.) மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர்
Mayor Priya


சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)

மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

இரு தொகுதிகளிலும் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் என பல்வேறு கட்சிகள் களத்தில் உள்ளதால், தேர்தல் பிரசாரம் தற்போது தீவிரமடைந்துள்ளது.

திமுக சார்பில் மதுராந்தகத்தில் ஐ. பரந்தாமனும், தாராபுரத்தில் எஸ். சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மேயர் பிரியா தனது எக்ஸ் தளத்தில்,

கொட்டும் மழையில் உருவான இயக்கம், என்பதாலோ; என்னவோ;

மதுராந்தகம் இடைத்தேர்தலில் கழக வெற்றி வேட்பாளர் பரந்தாமன் அவர்களை ஆதரித்து, சென்னை கிழக்கு மாவட்டத்தின் தேர்தல் பணிமனையானது கொட்டும் மழையிலே மாவட்ட கழக செயலாளர் அண்ணன் சேகர் பாபு அவர்களின் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் க.சுந்தர் அவர்களால் திறந்துவைக்கபட்டது.

இந்நிகழ்வில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழகச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், வட்டச் செயலாளர்கள், பாகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

உழைப்பது நாமாக இருப்போம், உதிப்பது உதயசூரியனாக இருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN