அண்ணா பல்கலை மாணவர்களுக்கு டெங்கு பரிசோதனை - 20 மாணவர்கள் சிகிச்சை பெற அறிவுரை
சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் எதிரொலியாக சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் சுமார் 200 மாணவ, மாணவிகளுக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 மாணவர்களுக்கு ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்
Anna University


சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் எதிரொலியாக சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் சுமார் 200 மாணவ, மாணவிகளுக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 20 மாணவர்களுக்கு ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது பரிசோதனை முடிவில் கண்டறியப்பட்டு உள்ளது.

பல்கலைக் கழகத்தில் உன்னி காய்ச்சல் பாதிப்பால் மாணவர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக டெங்கு பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இதில் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவாகக் கண்டறியப்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று மருத்துவ சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் பல்கலைக் கழகத்துக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பாத மாணவர்களுக்கு, சென்னையிலேயே மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலைக் கழக மாணவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN