போதிய பயணிகள் இல்லாததால் சென்னை–திருச்சி இண்டிகோ விமானங்கள் ரத்து
சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும், திருச்சியில் இருந்து சென்னை வரும் 2 இண்டிகோ பயணிகள் விமானங்கள், போதிய பயணிகள் இல்லாததால் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன
indigo flights at rajkot


சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும், திருச்சியில் இருந்து சென்னை வரும் 2 இண்டிகோ பயணிகள் விமானங்கள், போதிய பயணிகள் இல்லாததால் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, 10.40 மணிக்கு திருச்சி சென்றடைய வேண்டிய இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல், திருச்சியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு புறப்பட்டு, பகல் 12.10 மணிக்கு சென்னை வந்தடைய வேண்டிய இண்டிகோ விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த 2 விமானங்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு விமான நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களின் பயணச்சீட்டுகள் மாற்று விமானங்களில் பயணம் செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்களில் பயணம் செய்வதற்கு போதிய அளவில் பயணிகள் முன்பதிவு செய்யாததால், நிர்வாக காரணங்களுக்காக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

வாரத்தின் முதல் வேலை நாளான இன்று, சென்னை–திருச்சி மற்றும் திருச்சி–சென்னை விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், அரசு அலுவலக பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இரு நகரங்களுக்கு இடையே விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்த பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

Hindusthan Samachar / P YUVARAJ