Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், தனது தாயை இரண்டாவது திருமணம் செய்த காவலர் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், தனக்கு 17 வயது முதல் தனது தாயை கொலை செய்து விடுவதாக மிரட்டி காவலர் வேல்முருகன் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தற்போது பெங்களூரைச் சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளமான ஸ்நாப்சாட் மூலம் பழகி காதலித்து வருவதாக தெரிவித்ததால், காவலர் வேல்முருகன் தன்னை தாக்கியதாகவும் அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் வேல்முருகன் (58) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam