ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரட்டை வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவன் - முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து
சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.) ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றதிலும், தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதிலும் பங்களித்த தமிழக
Ilav


சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றதிலும், தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதிலும் பங்களித்த தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றதோடு, தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வீராங்கனைகளின் சாதனைகள் பாராட்டுக்குரியது என்றும், இது இளம் தலைமுறையினருக்கு இலக்கை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் களமிறங்கி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும் என்றும் முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ