Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினுடைய அமைப்பு மறுசீரமைப்பு குழு கூட்டங்கள் மாவட்ட வாரியாக துவங்க இருக்கின்றன என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அதில்,
அருமைத் தலைவர் ராகுல் காந்தி அவர்களுடைய முன்னெடுப்பில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தேர்வு கடந்த ஜனவரி பிப்ரவரி மாதங்கள் நடைபெற்றது. அதற்குப் பின்னர் ஆகஸ்ட் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அன்பு தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த 10 நாள் பயிற்சியிலேயே இயக்கத்தை எப்படி வலுப்படுத்த வேண்டும். தன்னைவிட காங்கிரஸ் அமைப்பு பெரிது என்று நினைக்கக் கூடிய தலைவர்களோடு அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு முடிவெடுக்கக்கூடிய தலைவராக உருவாக வேண்டும் என்பதை நம் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
இப்பொழுது கடந்த ஒரு மாதமாக மாவட்ட அளவில் பார்வையாளர்களாக முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை வேறு வேறு மாவட்டங்களுக்கு மாவட்ட பார்வையாளர்களாக அனுப்பி வைத்தேன். அவர்கள் அங்கு பல கூட்டங்களை நடத்தி காங்கிரஸ் தோழர்களை சந்தித்து மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு உரிய நபர்களையும் ஒன்றிய நகர பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு உரிய நபர்களையும் ஒன்றிய நிர்வாகிகளையும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் உடைய புதிய நிர்வாகிகளையும் பேசி கலந்தாலோசித்து ஜனநாயக முறையில் ஒத்த கருத்தோடு முடிவு செய்திருக்கிறார்கள்.
மாவட்ட பார்வையாளர்களும்,மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பணியை செய்திருக்கிறார்கள் இன்று முதல் ஒவ்வொரு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினுடைய முக்கிய தலைவர்களை சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து அவர்களோடு கலந்தாலோசித்து இந்த நிர்வாகிகளுடைய பட்டியலை முடிவு செய்கிறோம் ஜனநாயக முறையில் அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு முடிவெடுப்பது அருமைத் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பொருத்தமட்டில் உட்கட்சியில் ஜனநாயகம் என்பது ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக் கொள்ளும் பிரச்சினைகளும் நியாயமான தகுதி உள்ளவர்களை அந்தப் பொறுப்பில் எடுத்துச் செல்வதற்கான ஒரு நல்ல நடைமுறை உருவாக்க வேண்டும்.
அதனால் இன்று 21.09.2026 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் இதற்கு முன் இருந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அந்த மாவட்டத்தை சார்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் அந்த மாவட்டத்தைச் சார்ந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உடைய உறுப்பினர்கள் அந்த மாவட்டத்தை சார்ந்த சட்டமன்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த மாவட்டத்தைச் சார்ந்த நாடாளுமன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மாவட்டத்தைச் சார்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் அந்த மாவட்டத்தை சார்ந்த ஒன்றிய குழு தலைவர்கள் அந்த மாவட்டத்தைச் சார்ந்த நகராட்சி தலைவர்கள் அந்த மாவட்டத்தைச் சார்ந்த மாநகராட்சி மேயர் என்று இந்த நிர்வாகிகள் குழு கூட்டத்தை சென்னைக்கு அழைத்து இருக்கிறோம்.
ஒவ்வொரு மாவட்டமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அண்ணன் பீட்டர் அல்போன்ஸ் அவர்களோடு அமர்ந்து இந்தப் பணியை ஒருங்கிணைப்பதற்காக மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் உதவியோடு இன்று இந்த பணியை தொடங்குகிறோம் இந்த நீண்ட பணி ஒவ்வொரு மாவட்டத்தைப் பற்றி விவாதிப்பதற்காகவும் மாவட்டத்தினுடைய நிலையைப் பற்றி அறிவதற்குமான ஒரு நல்ல வாய்ப்பு மாவட்டத்தினுடைய தள கர்த்தாக்களாக தளபதிகளாக இருக்கின்றவர்களை பொறுத்து உரையாடுவதற்கான நல்ல வாய்ப்பு அவர்களுடைய கருத்துக்களை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினுடைய நிலை பற்றி கேட்பதற்கும் அரசியல் சூழ்நிலையும் மாறிய சூழ்நிலையும் நம்முடைய மதசார்பற்ற சமூகநீதியின் வெற்றிக் கூட்டணி பற்றியும் அந்த மாவட்டத்தினுடைய நிலையை பற்றியும் அந்த மாவட்டத்தினுடைய நம்முடைய பலத்தையும் நாம் அதிகரிக்க வேண்டிய மற்றும் கிடைக்கும் வாய்ப்புகளையும் பற்றி பேசவிருக்கின்றோம்.
இந்த நிகழ்வு அடுத்த மூன்று நாட்கள் 20 மாவட்டங்களில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை முடிவு செய்வதற்கான வாய்ப்பு காலையில் தொடங்கி மாலை வரை தொடர்ந்து மீட்பு கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.
இந்த முன்னெடுப்பு தமிழக காங்கிரஸ் கமிட்டியில் துவங்குகிறோம் இது ஜனநாயகபூர்வமான கலந்தாலோசித்து உண்மையான தலைவர்களுக்கு வாய்ப்பளிப்பதும் நம்முடைய நோக்கமாக இருக்கிறது இதில் எந்த கோஷ்டியும் இல்லாமல் இதில் எந்த சார்பும் இல்லாமல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து காங்கிரசை கோஷ்டி இல்லா காங்கிரஸாகவும் அருமைத் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பிரதமராக ஆக்கக்கூடிய படையை உருவாக்குகின்ற பணியில் இன்று தொடங்குகிறோம் உங்களுடைய ஆதரவு வேண்டும்.
“நம் இணைந்த கைகள் எதையும் சாதிக்கும் “ என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN