Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 21 செப்டம்பர் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் குன்னூர் உபாசி அரங்கில் இன்று நடைபெறும் தொழிலதிபர்கள் மாநாட்டிற்கு முதல் முறையாக வருகை தரும் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக குன்னூருக்கு வருகைதர உள்ளதால் சாலைகளில் காவல் துறையின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உபாசி என்று அழைக்கப்படும் தென்னிந்திய தோட்ட தொழிலதிபர்கள் சங்கம் குன்னூரில் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தில் தென்னிந்தியாவில் தோட்ட தொழில்களான தேயிலை, காபி, ரப்பர், வாசனை திரவியங்கள் போன்றவற்றை விளைவிக்கும் தோட்ட அதிபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் உபாசியின் 133-வது மாநாடு குன்னூரில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது
முதல் நாள் மாநாட்டை குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து உறையாற்றுகிறார்
தேயிலை, காபி, ரப்பர் போன்ற வாரியங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது மாநாட்டை முன்னிட்டு விவசாயம் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் நவீன காலங்களில் பயன்படுத்தக்கூடிய தேயிலை பறிக்கும் புதிய கருவிகள், பல்வேறு புதிய எந்திரங்கள் இடம் பெற்றுள்ளன.
இதுமட்டுமின்றி தேயிலை வாரியம் சார்பில், தேயிலைத்தூள் வகைகளும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இயற்கை முறையில் தேயிலை உள்பட அனைத்து விவசாயத்துக்கும் பயன்தர கூடிய இயற்கை உரங்கள் வைக்கப்பட்ள்ளது.
இதனை குடியரசு துணைத் தலைவர் விவசாயிகள், தொழிலதிபர்கள் பார்வையிட உள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN