Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 21 செப்டம்பர் (ஹி.ச.)
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று (செப்டம்பர் 20 ஆம் தேதி) தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது.
இதன் காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதை அடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சுற்றுலா தலம் இன்று
(செப்டம்பர் 21 ஆம் தேதி) தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்து உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் அருவியில் குளிப்பது உள்ளிட்ட சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்வது பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தக் கூடும் என்பதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் சுற்றுலா தலத்திற்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN