Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 21 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள கரட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்வேல் (வயது 59) என்பவர் தனது விளைநிலத்தின் அருகே உள்ள வனப் பகுதியில் மானை வேட்டையாடியதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து உடுமலை வனச்சரக அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் நேற்று அவரது வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, வேட்டையாடப்பட்ட மானின் இறைச்சியை சமைப்பதற்காக பதப்படுத்தி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்து சுமார் 10 கிலோ மான் இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து விவசாயி செந்தில்வேலை கைது செய்து விசாரணை நடத்திய பின்னர், வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், இந்த வேட்டைச் சம்பவத்தில் மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
தலைமறைவாக உள்ள அந்த இருவரையும் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b