உப்வன் அடுக்குமாடி மற்றும் கேரா கார்கி விரிவாக்கப் பகுதியில் சாலை மற்றும் வடிகால் பணிகளை தொடங்கியது டெல்லி அரசு
புதுடெல்லி, 21 செப்டம்பர் (ஹி.ச.) ''சேவா சங்கல்ப் அபியான்'' திட்டத்தின் கீழ், வடமேற்கு டெல்லியில் உள்ள ரோகிணி செக்டர்-28 உப்வன் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் கேரா கார்கி விரிவாக்கப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. இப்பக
The Delhi government has commenced road and drainage works in the Upvan Apartments and Khera Kalan extension area.


புதுடெல்லி, 21 செப்டம்பர் (ஹி.ச.)

'சேவா சங்கல்ப் அபியான்' திட்டத்தின் கீழ், வடமேற்கு டெல்லியில் உள்ள ரோகிணி செக்டர்-28 உப்வன் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் கேரா கார்கி விரிவாக்கப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் இன்று தொடங்கப்பட்டன.

இப்பகுதிகளில் சாலைகள், தெருக்கள், வடிகால்கள் மற்றும் சாலையோர மேடைகளை அமைத்தல் மற்றும் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கான போக்குவரத்து இணைப்பு மற்றும் அடிப்படை குடிமை வசதிகளை மேம்படுத்துவது நோக்கமாகும்.

உப்வன் அடுக்குமாடி குடியிருப்பில் சாலைகள், வடிகால்கள் மற்றும் சாலையோர மேடைகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. கேரா கார்கி விரிவாக்கப் பகுதியில், பல்வேறு தெருக்கள் மற்றும் வடிகால்களுடன், மயானத்திற்கு செல்லும் சாலையில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

மயானத்திற்கு செல்லும் சாலை நீண்ட காலமாக மோசமான நிலையில் இருந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்த திட்டங்கள் நிறைவடைந்ததும் அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் வடிகால் வசதி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து டெல்லி சமூக நலன், எஸ்.சி/எஸ்.டி/ஓ.பி.சி நலன், கூட்டுறவு மற்றும் தேர்தல் துறை அமைச்சர் ரவீந்தர் இந்திராஜ் சிங் கூறுகையில்,

வளர்ச்சியின் பலன்கள் நேரடியாக மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதில் மாநில அரசு உறுதியாக உள்ளது.

சாலைகள், தெருக்கள், வடிகால்கள் போன்ற அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து உள்ளூர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.

மக்கள் பணம் மக்கள் நலனுக்காகவும், குடிமை வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. வளர்ச்சிப் பணிகள் அரசு கோப்புகளில் மட்டும் இல்லாமல், களத்தில் உரிய நேரத்தில் நிறைவடைவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம்.

பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலிலும், முதலமைச்சர் ரேகா குப்தாவின் தலைமையிலும், சேவை, மரியாதை மற்றும் சுயசார்பு என்ற உறுதிப்பாட்டுடன் டெல்லி அரசு மக்கள் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை வேகப்படுத்தி வருகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தொடக்க விழா நிகழ்ச்சிகளில் வடமேற்கு டெல்லி பாஜக மாவட்ட துணைத் தலைவர் பிரவீன் ராணா, மண்டல தலைவர் நிமி ஷர்மா, குஷ்பு, முகேஷ், சுமன் கௌஷிக், பொதுச் செயலாளர் நரேந்திர, எஸ்.சி அணி தலைவர் வீரேந்திர, சேவா பாரதியைச் சேர்ந்த பாலிவால், சுரேஷ் சைனி, அசோக் சர்மா, ஜெகதீஷ் மற்றும் ராகுல் ஆகியோருடன் உள்ளூர் தொண்டர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b