தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சுகன்யா தீவிர வாக்குசேகரிப்பு
திருப்பூர், 21 செப்டம்பர் (ஹி.ச.) மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணிக்கையானது அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவ
DMK Suganya


திருப்பூர், 21 செப்டம்பர் (ஹி.ச.)

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணிக்கையானது அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறுகிறது.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில் மதுராந்தகம் தொகுதியில் 27 பேர் போட்டியிடுவது இறுதியாகியுள்ளது.

இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.

தவெக சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் பி. சத்யபாமாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

திமுக சார்பில் மதுராந்தகத்தில் ஐ. பரந்தாமனும், தாராபுரத்தில் எஸ். சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அதிமுக சார்பில் கணிதா சம்பத்தும், கே. பானுமதியும் வேட்பாளர்களாக உள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களாக மதுராந்தகம் தொகுதியில், கோ. ஜானகிராமன் என்பவரும், தாராபுரம் தொகுதியில், மு. கார்த்திகா என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யா தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

குறிப்பாக பஞ்சப்பட்டி, சின்னக்கம்பாளையம், கொட்டமுத்தாம்பாளையம், தேவநல்லூர், சங்கராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Hindusthan Samachar / ANANDHAN