தாராபுரம் இடைத்தேர்தல்-காரில் ரகசியமாக கடத்தப்பட்ட ரூ.5.50 லட்சம் பறிமுதல்
திருப்பூர், 21 செப்டம்பர் (ஹி.ச.) இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5.50 லட்சம் ரொ
தாராபுரம் இடைத்தேர்தல் : காரில் ரகசியமாக கடத்தப்பட்ட ரூ.5.50 லட்சம் பறிமுதல் - பொறியாளரிடம் போலீசார் தீவிர விசாரணை


திருப்பூர், 21 செப்டம்பர் (ஹி.ச.)

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5.50 லட்சம் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், சந்தேகத்திற்கு இடமாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது நடந்துள்ளது.

சோதனையின் போது, காரின் மறைவான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்த பொறியாளர் பாலசுப்பிரமணியம் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் கொண்டு வந்த ரூ.5.50 லட்சத்திற்கு உரிய ஆவணங்கள் எதையும் முறையாக சமர்ப்பிக்கவில்லை என்று தெரியவந்தது. பணத்தை எதற்காக, எங்கிருந்து எங்கு கொண்டு செல்கிறார் என்பதற்கும் அவர் தகுந்த விளக்கம் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள தாராபுரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் தொடர்பான விநியோகத்திற்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வேறு தேவைக்காக கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b