டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பஸ் கட்டணத்தை உயர்த்தக் கோரிய வழக்கு - தமிழக அரசுக்கு 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.) டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி
High court


சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)

டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக உயர்நிலைக் குழு கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகள், போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உயர்நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், வழக்கின் விசாரணையை அக்டோபர்

26-ம் தேதிக்கு நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் தள்ளிவைத்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ