ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் லிப்டில் சிக்கிய அமைச்சர்
ஈரோடு, 21 செப்டம்பர் (ஹி.ச.) ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் சுகாதாரத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை அதிகாரிகள் லிப்ட் மூலம் இரண்டாவது மாடிக்கு அழைத்துச
TVK Arunraj


ஈரோடு, 21 செப்டம்பர் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் சுகாதாரத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை அதிகாரிகள் லிப்ட் மூலம் இரண்டாவது மாடிக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக லிப்டில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அமைச்சர் அருண்ராஜ் லிப்டுக்குள் சிக்கிக் கொண்டார்.

அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட சில அதிகாரிகளும் லிப்டுக்குள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு அமைச்சர் உள்ளிட்டோர் வேறொரு லிப்ட் மூலம் கீழே அழைத்து வரப்பட்டனர்.

லிப்டில் அமைச்சர் சிக்கிய சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னர் அமைச்சர் வழக்கம்போல் சுகாதாரத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P