Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)
உலக சந்தையில் தங்கத்தின் விலை 2027ஆம் ஆண்டிலும் தொடர்ந்து உயர்வை சந்திக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்க பெடரல் ரிசர்வின் பணவியல் கொள்கை, அமெரிக்க டாலரின் மதிப்பு, மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் மற்றும் புவிசார் பதற்றங்கள் ஆகியவை தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.
ஜேபி மோர்கன் வெளியிட்டுள்ள கணிப்பில், 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் 6,300 அமெரிக்க டாலர் வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், UBS நிறுவனம் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 5,000 டாலர், ஜூன் மாதத்தில் 5,200 டாலர், செப்டம்பர் மாதத்தில் 5,400 டாலர் என்ற அளவுக்கு தங்கத்தின் விலை செல்லக்கூடும் என கணித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகித முடிவுகள் குறுகிய காலத்தில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக வட்டி விகிதம் மற்றும் வலுவான டாலர் தங்கத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் நிலையில், எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் குறையும் சூழல் ஏற்பட்டால் தங்கத்தின் மீதான முதலீட்டு தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை கையிருப்பில் சேர்ப்பது தங்கத்தின் விலைக்கு நீண்டகால ஆதரவாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும், 2027ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஒரே திசையில் உயரும் என்பது உறுதியானது அல்ல என்றும், டாலர் மதிப்பு, வட்டி விகிதம் மற்றும் உலக பொருளாதார சூழ்நிலையை பொறுத்து இடைக்கால சரிவுகள் ஏற்படலாம் என்றும் சந்தை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P