கேரள நிலச்சரிவில் சிக்கி சென்னை ரயில்வே பெண் ஊழியர் உயிரிழப்பு - தமிழ்நாடு அரசு இரங்கல்
சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச) கேரள மாநிலம் கோட்டயத்தில் நடைபெற்ற தென்னக ரயில்வே அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த ரயில்வே பெண் ஊழியர் சங்கீதா, டீகோய் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். இந்
Land


Ub


சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச)

கேரள மாநிலம் கோட்டயத்தில் நடைபெற்ற தென்னக ரயில்வே அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த ரயில்வே பெண் ஊழியர் சங்கீதா, டீகோய் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திரிசூலம் ரயில் நிலையத்தில் கவுண்டர் எழுத்தராக சங்கீதா பணிபுரிந்து வந்தார். தென்னக ரயில்வே அதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள மாநிலம் கோட்டயத்துக்கு சென்றிருந்த நிலையில், டீகோய் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கீதாவின் திடீர் உயிரிழப்பு குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அலுவலக நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், உயிரிழந்த சங்கீதாவின் உடலை சென்னைக்கு கொண்டு வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக கேரள மாநில அரசுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ