Gen Z தலைமுறைக்கும் தி.மு.க.வின் வன்முறை வெறியாட்டத்தை தந்தை, மகன் புரிய வைக்கின்றனர் - த.வெ.க ஐ.டி. விங்
சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.) அண்ணா ஆரம்பித்த பொன்னான திமுகவை, புண்ணாக்கி சின்னாபின்னமாக்கி வரும் தந்தையும் மகனும் தாறுமாறாக மனம் தடுமாறி இருக்கின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாகப் பின்னோக்கிச் சென்று உண்மையைப் பேசத் தொடங்கி உள்ளனர் என்று தவெக
Stalin Udhay


சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)

அண்ணா ஆரம்பித்த பொன்னான திமுகவை, புண்ணாக்கி சின்னாபின்னமாக்கி வரும் தந்தையும் மகனும் தாறுமாறாக மனம் தடுமாறி இருக்கின்றனர்.

அதை உறுதிப்படுத்தும் விதமாகப் பின்னோக்கிச் சென்று உண்மையைப் பேசத் தொடங்கி உள்ளனர் என்று தவெக ஐ.டி. விங் தனது எக்ஸ் தளத்தில் விமர்சித்து உள்ளது.

அதில்,

மின்வெட்டையும் அரிவாள் வெட்டையும் ரைமிங்காகவும் டைமிங்காகவும் பேசுவதாக நினைத்து 2006 திமுக ஆட்சியில் தமிழ்நாடே மின்வெட்டில் மூழ்கியதை மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்திப் பெருமிதம் கொள்கின்றனர்.

அதுமட்டுமா?. அரிவாள் வெட்டைப் பற்றிப் பேசி தி.மு.க.வின் மூத்த முன்னோடியாகவும் தமிழக அமைச்சராகவும் இருந்த திரு.தா.கிருட்டிணன் அவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டதை இன்றைய Gen Z தலைமுறைக்கும் தெரியப்படுத்தி, தி.மு.க.வின் வன்முறை வெறியாட்டத்தைப் புரிய வைக்கின்றனர்.

ஒரே கொடுமை என்னவெனில், தந்தையாவது கட்சி மேடையில் கதைத்தார்.

மகனோ, மங்கல நிகழ்ச்சியான திருமண விழாவில் தங்கள் ஆட்சியின் பழைய வரலாற்றைச் சொல்லிச் சொல்லி ஒப்பாரி வைக்கிறார்.

அப்படியே இனிவரும் காலங்களில், உங்கள் குடும்பத்தின் ஊழல் சாதனைகளையும்

உதார் தியாக புரூடாக்களையும் உளறிக்கொட்டி மக்களை உஷார்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN