வீடியோ ஆதாரங்கள் இருந்தும் வீரமணி மீது ஏன் நடவடிக்கை இல்லை? – அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி
சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.) ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி மீது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் காவல்துறையிடம் இருந்தும் கடந்த ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கப்
Nir


சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)

ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி மீது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் காவல்துறையிடம் இருந்தும் கடந்த ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், தேனாம்பேட்டையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து பெண்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் ஜெம் கிரானைட் வீரமணி கைது செய்யப்பட்டிருப்பது குறித்து பேசினார்.

இந்த விவகாரம் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே காவல்துறையிடம் இருந்ததாகவும், ஆனால் அப்போதைய ஆட்சியாளர்கள் அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.

மேலும், பணம் படைத்தவர்கள் மற்றும் அதிகார பலம் கொண்டவர்கள் என்றால் சட்டம் வளைந்து கொடுக்கும் நிலையை கடந்த ஆட்சி உருவாக்கியிருந்ததாகவும் அவர் விமர்சித்தார்.

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் சமம் என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்த அமைச்சர், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைக்கும் வரை அரசு ஓயாது என்றும் கூறினார்.

இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உறுதியளித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ