இடைத்தேர்தல் பணிகள் குறித்து தி.மு.க நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.) மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக இரு தொகுதிகளுக்கும் தலா 21 தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்
மு.க.ஸ்டாலின்


சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக இரு தொகுதிகளுக்கும் தலா 21 தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொகுதிகள் பாகம் வாரியாகப் பிரிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 21 பேர் வீதம் தேர்தல் பணிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனையில் இடைத்தேர்தல் பரப்புரையை எவ்வாறு முன்னெடுப்பது, தொகுதிகளில் நிலவும் களச் சூழல், கட்சியின் தேர்தல் பணிகள் மற்றும் வாக்காளர்களை அணுகுவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களின் பணிகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் களத்தில் மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தேர்தல் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக பரப்புரையை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P