Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை தண்டையார்பேட்டையில் நீண்ட நாள் எதிர்பார்ப்பில் இருந்த ஐ.ஓ.சி. பேருந்து முனையம் இன்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவில் அமைச்சர்கள் பார்த்திபன் மற்றும் மரிய வில்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முனையத்தை திறந்து வைத்தனர்.
வடசென்னை மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் நவீன வசதிகளுடன் இந்த பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. பயணிகள் அமர்ந்து செல்வதற்கான இருக்கைகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் பேருந்துகள் வந்து செல்வதை அறிவிக்கும் மின்னணு பலகைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் மரியவில்சன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த பேருந்து நிலையம் 16 ஆயிரம் சதுர அடியில், 2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் இருந்த எம்.எல்.ஏ வின் நிதியில் இருந்துதான் இது கட்டப்பட்டுள்ளது. எனவே அவருக்கும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முறைப்படி அழைப்பு கொடுத்தோம் எதிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். பெயர் எடுத்துக்கொள்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. எங்கள் தலைவரும் எங்களுக்கு அப்படி சொல்லிக்கொடுக்கவில்லை. அந்த அடிப்படையில் மேயர், MP, கவுன்சிலர் முன்னாள் MLA ஆகியோருக்கு அழைப்பு கொடுத்தோம். வந்து இருந்தால் நல்லது. அவர்களும் மகிழ்ச்சியடைந்து இருப்பார்கள்.
பேருந்துகளை அதிகமாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. பல கோரிக்கைகளை போக்குவரத்துறை அமைச்சரிடம் கொடுத்துள்ளேன். அவரும் செய்துகொடுப்பதாக கூறியுள்ளார் என்று அமைச்சர் கூறினார்.
மேலும் லண்டன் பயணம் குறித்து அண்ணாமலை விமர்சனம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், அவரை மெச்யூர்ட் அரசியல்வாதியாக நினைக்கிறேன். அவர் பாஜகவில் பல ஆண்டுகள் இருந்துள்ளார். IPS அதிகாரியாக இருந்துள்ளார். அப்படிப்பட்டவரின் ஸ்டேட்மென்ட் நல்லது இல்லை ஒரு ரூபாய் என்றாலும் முதலீடுதான். அந்த ஒரு ரூபாயை எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்
எங்கு இருந்து முதலீடு வந்தாலும் அதை கொண்டுவரும் முதல்வரை கிண்டல் கேலி செய்வது நல்லது இல்லை என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தூய்மையாக ஆட்சியை தமிழக மக்கள் கொண்டுவந்ததால்தான் இன்று வரி வருவாய் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 2025 யில் 97,667 கோடியாக இருந்த வரி வருவாய், 2026 ஆகஸ்டில் 1,09,104 கோடியாக அதிகரித்துள்ளது. சுமார் 12 சதவிதம் அதிகமாகி உள்ளது. ஊழல் இல்லாமல் வரி வருவாயை முதல்வர் கொண்டு வந்துள்ளார். 100 சதவீத வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறோம். கடன் குறைந்துகொண்டு இருக்கிறது. வட்டி கட்ட வேண்டும், நிறைய திட்டங்களை அறிவித்து இருக்கிறோம். எனவே செலவு இருந்துகொண்டே இருக்கும்.
இந்த புதிய முனையம் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினர்.
நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b