நகைக்கடையில் திருடு போன 40 பவுன் நகை பறிமுதல் - கைதானவர் சிறையில் அடைப்பு
திண்டுக்கல், 21 செப்டம்பர் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பஜாரில் பிரபலமான நகைக்கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தகடையில் கடந்த சில நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக நகைகள் திருடப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடை உரிமையா
Nilakottai


திண்டுக்கல், 21 செப்டம்பர் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பஜாரில் பிரபலமான நகைக்கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தகடையில் கடந்த சில நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக நகைகள் திருடப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கடை உரிமையாளர் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கடையில் வேலை செய்யும் ஊழியர்களின் நடவடிக்கைகளை, நகை கடை உரிமையாளர் கண்காணித்து வந்தார்.

இதில், இந்தக் கடையில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வரும் நிலக்கோட்டை அருகே உள்ள, கொம்புகாரன்பட்டியைச் சேர்ந்த பிரபு (34) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவரது நடவடிக்கையை கண்காணித்த போது, ஒரு நாள் ஒரு கிராம் தங்க நகையை திருடி எடுத்து பாக்கெட்டுக்குள் வைக்கும் போது கையும் களவுமாக பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து பிரபுவிடம் எவ்வளவு நகை இதுவரை திருடி இருக்கிறீர்கள் என்று, கடை உரிமையாளர் மாலினி கேட்டபோது, முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார்.

இதுகுறித்து நகை கடை உரிமையாளர் நாகப்பன் என்பவரின் மனைவி மாலினி (40) என்பவர் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்த, காவல் ஆய்வாளர் ஜெயபாண்டி, பிரபுவை அழைத்து தீவிர விசாரணை நடத்தினார்.

விசாரணையில் கடந்த சில நாட்களாக நகைக்கடையில் கொஞ்சம் கொஞ்சமாக திருடிய மொத்தம் 40 பவுன் தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், இவ்வழக்கில் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN