கடுவனூரில் 10 நாட்களாக குடிநீர் இல்லை - அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சி, 21 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சீரற்ற விநியோகத்தைக் கண்டித்து கிராம மக்கள் காலிக்குடங்களுடன் அரசு பேருந்துகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைகாலமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து ந
No drinking water in Kaduvanur for 10 days


கள்ளக்குறிச்சி, 21 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சீரற்ற விநியோகத்தைக் கண்டித்து கிராம மக்கள் காலிக்குடங்களுடன் அரசு பேருந்துகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைகாலமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருவதாகவும், குறிப்பாக கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், குடிநீர் வாரிய அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை அவ்வழியாக வந்த அரசு பேருந்தை வழிமறித்து சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடியாக சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b