Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 21 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்ததேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பிரச்சார பயணத்தை இன்று தொடங்குகிறார்.
தாராபுரம் தொகுதி நாதக வேட்பாளர் மு.கார்த்திகாவை ஆதரித்து, தாராபுரம் காவல் நிலையம் அருகில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.
தொடர்ந்து, செப்.22 மற்றும் 23-ம் தேதிகளில் தாராபுரம் தொகுதியிலும், செப். 26, 27, 30 மற்றும் அக்.1-ம் தேதிகளில் மதுராந்தகம் தொகுதியிலும் அவர் வாகனப் பரப்புரை மற்றும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக வாக்கு சேகரிக்கிறார்.
இறுதிக்கட்டமாக அக். 3 மற்றும் 4-ம் தேதிகளில் மீண்டும் தாராபுரம் தொகுதியில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P