அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து 6 பேர் காயம்
ஐதராபாத் , 21 செப்டம்பர் (ஹி.ச.) தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு வாரங்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
A


ஐதராபாத் , 21 செப்டம்பர் (ஹி.ச.)

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு வாரங்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

உள்நோயாளிகளாகவும் பலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு மருத்துவமனையின் ஒரு பகுதியில் திடீரென பரபரப்பான சம்பவம் நடந்தது. பலகைகளால் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையின் ஒரு பகுதி எதிர்பாராதவிதமாக இடிந்து கீழே விழுந்தது.

இதனால் அங்கு இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

6 பேர் காயம்

மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கு இருந்த 2 நோயாளிகள், 2 செவிலியர்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

மேற்கூரையின் இடிபாடுகள் விழுந்ததில் அவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேற்கூரை எந்த காரணத்தால் இடிந்து விழுந்தது? மருத்துவமனையின் கட்டிடத்தின் உறுதித்தன்மை எவ்வாறு உள்ளது? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA