திருப்பதி பிரம்மோற்சவம் -  7-ம் நாள் காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா
சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று காலை, தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்
Thiru


சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று காலை, தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், விழாவின் 7-ம் நாளான இன்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமியை நான்கு மாட வீதிகளிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சுவாமி வீதி உலா வந்தபோது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு வழிபட்டனர். சுவாமியின் வாகனத்தை காண நான்கு மாட வீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

மேலும், வீதி உலாவின்போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைக் குழுவினர் பங்கேற்று, சுவாமியின் பல்வேறு வேடங்களை அணிந்து ஊர்வலமாக அணிவகுத்து வந்தனர்.

அவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பக்தர்களின் கவனத்தை ஈர்த்தன.

இதனைத் தொடர்ந்து, பிரம்மோற்சவத்தின் 7-ம் நாள் இரவு சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ