உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு 1,106 தங்க மோதிரங்கள் வருகை
மதுரை, 21 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும் 28-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் உசி
தங்க மோதிரம்


மதுரை, 21 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும் 28-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகள் உசிலம்பட்டியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய் மகாலிங்கம் தலைமையில், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலையில், தங்க மோதிரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக மதுரையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் இருந்து 776 தங்க மோதிரங்களும், மதுரை கல்யாண் ஜூவல்லர்ஸில் இருந்து 330 தங்க மோதிரங்களும் என மொத்தம் 1,106 ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரங்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / GOKILA arumugam