முதல் ஒருநாள் போட்டி - இங்கிலாந்து-இலங்கை அணிகள் நாளை மோதல்
லண்டன் , 21 செப்டம்பர் (ஹி.ச.) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அந்த அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கண
A


லண்டன் , 21 செப்டம்பர் (ஹி.ச.)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அந்த அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

முதல் ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் ரிவர்சைட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

டி20 தொடரை இழந்த இலங்கை அணி, ஒருநாள் தொடரை கைப்பற்றி பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும்.

அதேபோல், டி20 தொடரில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி, ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் களம் இறங்குகிறது.

இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவதால், முதல் ஒருநாள் போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பான ஆட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA