விஜயவாடா சம்பவத்துடன் தொடர்பில்லாத 250-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு -ஓய்.எஸ்.ஆர் தலைவர் அம்பதி ராம்பாபு
விஜயவாடா , 22 செப்டம்பர் (ஹி.ச.) விஜயவாடாவில் உள்ள ஷாப் அலுவலகம் அருகே டி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டம் நடத்திய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு அக்கட்சியின் முன்னாள் மந்திரி அம்
A


விஜயவாடா , 22 செப்டம்பர் (ஹி.ச.)

விஜயவாடாவில் உள்ள ஷாப் அலுவலகம் அருகே டி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டம் நடத்திய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கு அக்கட்சியின் முன்னாள் மந்திரி அம்பதி ராம்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாடேப்பள்ளியில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்பதி ராம்பாபு,

டி.எஸ்.சி. முறைகேடுகளை கண்டித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது கூட்டணி அரசு திட்டமிட்டு தாக்குதல் நடத்திவிட்டு, அவர்கள்மீதே வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

விஜயவாடா சம்பவத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாத 250-க்கும் மேற்பட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் மீது பல்வேறு கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் கூறினார்.

முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மந்திரி நாரா லோகேஷ் ஆகியோரின் உத்தரவின்பேரிலேயே இந்த வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் அம்பதி ராம்பாபு குற்றம்சாட்டினார்.

சம்பவம் நடந்த நேரத்தில் விஜயவாடாவில் இல்லாதவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், போலீசார் சாதாரண உடையில் வந்து, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இரவு நேரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்துச் சென்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

போலீஸ் அதிகாரத்தை பயன்படுத்தி கட்சியினரை ஒடுக்க முயற்சி நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகாரம் நிரந்தரமானது அல்ல என்றும், அநியாயமாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடி சட்டப்பூர்வமாக போராடுவோம் என்றும் அம்பதி ராம்பாபு தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA