Enter your Email Address to subscribe to our newsletters

திருவூர் , 22 செப்டம்பர் (ஹி.ச.)
என்.டி.ஆர். மாவட்டம் திருவூர் நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், மதிரா பிரதான சாலையை நவீனப்படுத்தி விரிவுபடுத்தும் பணிகள் ரூ.14 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
ஆந்திர மாநில தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு காணொலி காட்சி மூலம் இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
‘ஹைபிரிட் ஆன்யுட்டி மாடல்’ முறையில் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளை, திருவூர் தொகுதி எம்.எல்.ஏ. கொலிகபுடி சீனிவாசராவ் நேரில் தொடங்கி வைத்தார்.
இதையொட்டி மதிரா சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
எம்.எல்.ஏ. கொலிகபுடி சீனிவாசராவ் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில்,
ஐதராபாத்தில் உள்ள உலகத்தரம் வாய்ந்த ஐ.எஸ்.பி. சாலைகள் மற்றும் அமராவதியில் உள்ள சீட் ஆக்சிஸ் சாலைகள் போன்று திருவூர்–மதிரா பிரதான சாலையை நவீன வசதிகளுடன் மேம்படுத்தி அழகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ரூ.14 கோடி மதிப்பிலான இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதும் திருவூர் நகரின் முகத்தோற்றம் மாறுவதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மேம்பட்ட போக்குவரத்து வசதிகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியின் போது எம்.எல்.ஏ. கொலிகபுடி சீனிவாசராவ் டப்பாட்டம் அடித்து நடனமாடி கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. ஏ.குமார், நகராட்சி ஆணையாளர் கே.மனோஜ் மற்றும் தெலுங்குதேசம், ஜனசேனா, பா.ஜ.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA