Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.)
ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கும் முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கும், அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும், கமலினியின் சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
கமலினியைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள அவர், கமலினியின் வெற்றி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கமலினி தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜோசப் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ