காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார் விஜய்!
சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய்
Breakfast Scheme


சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று (செப். 22) சென்னை திருவான்மியூரில் தொடங்கி வைத்தார்.

திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவையும் உட்கொண்டார். முதல் நாள் உணவாக சாம்பார், வெண்பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்து கல்வியில் முழுமையாக கவனம் செலுத்தும் சூழலை உருவாக்கவும் இந்த காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் முதன்முதலில் 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாக பயன்பெற உள்ளனர்.

இதற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், திட்டத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உயர்ந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN