த.வெ.க அரசுக்கு காங்கிரஸ் கட்சி என்றென்றும் நன்றியுடன் இருக்கும் – அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
மதுரை, 22 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விசுவநாதன் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு காலை உணவை
Minister Vishwanathan


மதுரை, 22 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விசுவநாதன் தொடங்கி வைத்தார்.

மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறிய அமைச்சர், மாணவிகளுக்கு தனது கைகளால் உணவை ஊட்டியும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விசுவநாதன்,

தான் பள்ளியில் படித்த காலத்தில் பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தின் மூலம் உணவு உண்டு, கல்வி பயின்றதாகவும், இன்று காமராஜர் பணியாற்றிய அதே சட்டமன்றத்தில் தானும் அமைச்சராக பணியாற்றுவது பெருமைக்குரியதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள காமராஜரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன்பெறுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்திய தமிழக அரசுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு காங்கிரஸ் கட்சி என்றென்றும் நன்றியுடன் இருக்கும் என்றும் அமைச்சர் விசுவநாதன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN