Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு முழுவதும் புதிய நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் புதிய நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக நிலுவையில் உள்ள திட்டங்கள், அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு முழுவதும் புதிய நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்த முழுமையான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ