Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.)
இடைத்தேர்தலுக்கான தவெக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியானது தொடர்பாக திமுக எம்பி இன்பதுரை தனது எக்ஸ் தளத்தில்,
நினைத்து நினைத்து பெயர்களை சேர்க்கவோ அல்லது நீக்கவோ நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் என்பது தவெக கட்சியின் உள்கட்சி அறிவிப்பு அல்ல; R.P. Act, 1951 – Section 77(1), Explanation 1 & Explanation 2 மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது.
Section 77(1), Explanation 2-ன் proviso படி, பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒருவர் இறந்தாலோ அல்லது அந்த அரசியல் கட்சியின் உறுப்பினராக இல்லாமல் போனாலோ, அவருக்குப் பதிலாக மற்றொரு பெயரைச் சேர்ப்பது தொடர்பான சிறப்பு விதி உள்ளது.
மேலும், நட்சத்திரப் பேச்சாளர்களின் பட்டியல் தேர்தல் அறிவிக்கை வெளியான 7 நாட்களுக்குள் ECI மற்றும் சம்பந்தப்பட்ட CEO-விடம் தெரிவிக்கப்பட வேண்டும். முறையாகத் தெரிவிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கே Section 77-ன் சிறப்பு செலவுக் கணக்கு விதிகள் பொருந்தும்.
வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் போன்றோரை தவெக கட்சி தனது Star Campaigner பட்டியலில் இருந்து தற்போது நீக்கியுள்ள நிலையில், அவர்கள் தவெக வேட்பாளர்களுக்காக மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்தால், Section 77-ன் Star Campaigner செலவு விலக்கு அவர்களுக்குப் பொருந்தாது.
எனவே, அந்தப் பிரசாரத்துடன் தொடர்புடைய செலவுகள் Section 77 மற்றும் ECI-யின் expenditure-monitoring விதிகளின்படி சம்பந்தப்பட்ட தவெக வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் முன் உள்ள முக்கிய சட்டநிலை.
சட்டம் பேசட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN