Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.)
தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தகுதியான வாக்காளர்களுக்கான தபால் வாக்குப்பதிவு மற்றும் வாக்குகளைச் சேகரிக்கும் பணி இன்று தொடங்கியது.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் தகுதியானவர்களுக்கான தபால் வாக்குகளைச் சேகரிக்கும் பணி இன்று தொடங்கியது.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 105 தபால் வாக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினரின் பாதுகாப்புடன் தகுதியான வாக்காளர்களிடம் இருந்து தபால் வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர்.
தபால் வாக்குப்பதிவு மற்றும் சேகரிப்பு பணிகள் தேர்தல் விதிமுறைகளின்படி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ