மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் திருத்தேரோட்டம்
கோவை, 22 செப்டம்பர் (ஹி.ச.) கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில், வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்
தேரோட்டம்


கோவை, 22 செப்டம்பர் (ஹி.ச.)

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில், வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவ விழாவில், தினமும் அனுமந்த வாகனம், கருட வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் மலையப்பசாமி எழுந்தருளினார்.

தொடர்ந்து அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, திரளான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர்.

கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட திருத்தேர், கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. திருத்தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam